2025 மே 05, திங்கட்கிழமை

இந்து மயானத்திற்கு சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன் ,எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு, கிரான் கிழக்கு பிரதேசத்தில் உள்ள இந்து மயானத்திற்கான சுற்று மதில் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

இதற்கான அடிக்கல்லை மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
மேற்படி மதில் அமைப்பதற்;காக முதற்கட்டமாக ருபா 5 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

பிரதேசத்தில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இப்பகுதிக்கான பிரதேச சபைகளே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் சபைகளில் நிதிபற்றாக்குறை காணப்படுவதனால் அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டிய நிலமை காணப்படுகின்றது'  என அவர் இதன்போது தெரித்தார்.

கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் க.சவுந்தராஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் மணோகரதாஸ் பேரின்பமலர் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X