2025 மே 06, செவ்வாய்க்கிழமை

போஷாக்கு உணவு தொடர்பான விழிப்புணர்வூட்டும் ஊர்வலம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


போஷாக்கு மாதத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த போஷாக்கு உணவு தொடர்பான விழிப்புணர்வூட்டும் ஊர்வலம் நேற்று வியாழக்கிழமை  இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரீக் தலைமையில் இடம்பெற்ற விழிப்புணர்வு பேரணியில் மீள்குடியோற்றப் பிரதேச பாடசாலைகளான பாலை நகர் ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயம், தியாவட்டுவான் அறபா வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்களும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரும்; பேரணியில் கலந்துகொண்டனர்.

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் தியாவட்டுவான் அறபா வித்தியாலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமான பேரணி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் வரை சென்றது.

'பேரணியில் கலந்துகொண்டோர் பால் ஒரு நிறை உணவு', 'தினமும் அருந்தினால் ஆரோக்கியம் பெறலாம்', 'வாழ்க்கை பேனுவோம் சூழலைப் பாதுகாப்போம்', 'சமபோஷாக்கான உணவும் உடற் பயிற்சியும்',  'உடல் உள ஆரோக்கியத்தைப் பேனுவோம்'  ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திச் சென்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X