2025 மே 05, திங்கட்கிழமை

பெண்கள் தொடர்பான சட்டத்தை தளர்த்துவதற்கு நடவடிக்கை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்து செல்லும் சட்டத்தை தளர்த்துவதற்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உறுதியளித்துள்ளதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்; மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்து செல்வது தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் சாரி மற்றும் அபாய போன்ற உடைகளை அணிந்து இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணி;ப்பதிலுள்ள சிரமங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியதையடுத்து இந்த சட்டத்தை தளர்த்துவதற்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில்; மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்துசெல்லும் சட்டத்தை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்சிடம் உறுதியளித்தும் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இரண்டு பக்கமும் கால்களை வைத்து செல்லாத நூற்றுக்கு மேற்பட்டோருக்கு எதிராக மோட்டர் போக்குவரத்து பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்கதக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X