2025 மே 05, திங்கட்கிழமை

நாடாளுமன்ற உறுப்பினர் - தொழிற் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 17 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

வாழைச்சேனை காகித ஆலையின் தொழிற் சங்க நிர்வாகிகள் நேற்று வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவை சந்தித்துள்ளனர்.

இதன்போது தங்களுக்கு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் சம்பள  கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலை அடிக்கடி இடம்பெறுவதாகவும் சம்பள பணம் பெறுவதற்கு  மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிட்ட பின்னரே நிலுவை பணம் வழங்கப்படுவதாகவும் இந்த சந்திப்பின் போது குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேற்படி ஆலையில் தற்போது 140 நிரந்தர ஊழியர்களும் 150 அமைய அடிப்படையிலான ஊழியர்களும் தொழில் புரிந்து வருகின்றனர். இவர்களுக்கான சம்பளத் தொகையை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி பெற்றுத்தருமாறும் இதன்போது நாடாளுமண்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை கேட்டறிந்த கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரச வழங்கல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளருடன் மேற்படி வி;டயம் தொடர்பாக தொடர்புகொண்டார்.

இதனையடுத்து காகித ஆலையின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவுடன் தொடர்புகொண்டு தற்போது ஆலையானது சுயமாக  இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊழியர்களுக்குரிய நிலுவை சம்பளம ஒரு வார காலத்திற்குள் வழங்குவதற்க்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • கதிரவன் Saturday, 17 August 2013 05:38 AM

    பொன் செல்வராசா அவர்களே, இன்னும் உறுதிமொழி வழங்கி மக்களை ஏமாற்றப்போகிறீர்களா? தமிழர்களை நீங்கள் ஏமாளிகளாக மட்டும் நினைக்க வேண்டாம். நீங்கள் கடந்த மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளர் தேர்வில் அரங்கேற்றிய நாடகத்திற்கான பெறுபேறுகளை அடுத்த தேர்தலில் எதிர்பாருங்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X