2025 மே 05, திங்கட்கிழமை

கேரளாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுகின்றது: பூஜித ஜெயசுந்தர

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'கேரளாவிலிருந்து தலைமன்னார் ஊடாக இலங்கைக்கு கஞ்சா கொண்டுவரப்பட்டு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட பல இடங்களுக்கும் விற்பணை செய்யப்படுகின்றன' என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.

'இவ்வாறு கஞ்சாவை மொத்தமாக விற்பணை செய்கின்றவர்கள் மற்றும் அதை குளிரூட்டப்பட்ட வாகனங்களில் கடத்துகின்றவர்களை கைதுசெய்யவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரமுகர்களை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்தித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர,

'பொதுமக்களுக்காகவே பொலிஸார் உள்ளனர். மாறாக பொலிஸாருக்காக பொதுமக்கள் இல்லை. பொலிஸாh மக்களுக்கு உதவி செய்யும்போது பொதுமக்களும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் போதைவஸ்த்து பாவனையை இல்லாமல் செய்ய அனைவரும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

கேரளாவிலிருந்து தலைமன்னார் ஊடாக இலங்கைக்கு கஞ்சா கொண்டுவரப்பட்டு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட பல இடங்களுக்கும் விற்பணை செய்யப்படுகின்றன.

இவ்வாறு விற்பணை செய்யும் பெரிய புள்ளிகள் கைதுசெய்யப்படுவதில்லை. இதில் சிறிய கஞ்சா கட்டுக்களை வைத்திருப்பவர்கள்தான் பிடிபடுகின்றனர்.

இவ்வாறு கஞ்சாவை மொத்தமாக விற்பணை செய்கின்றவர்கள் மற்றும் அதை குளிரூட்டப்பட்ட வாகனங்களில் கடத்துகின்றவர்களை கைதுசெய்யவேண்டும்.

இதற்காக பொதுமக்கள் சமூக பிரமுகர்கள் அனைவரும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்க வேண்டும்.

பொலிஸார் பொதுமக்களுக்காக மனிதாபிமானத்துடன் செயலாற்ற வேண்டிய பொறுப்பும் உள்ளது. பொதுமக்களுடன் பொலிஸார் முறையாக நடந்து கொள்ளவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரினால் கெடுபிடிகள் இருக்குமாயின் எனக்கு நீங்கள் அறியத்தரவேண்டும். நான் உடனடியாகவே நடவடிக்கை எடுப்பேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X