2025 மே 05, திங்கட்கிழமை

த.ம.வி.பு கட்சியின் உறுப்பினர் கைது

Super User   / 2013 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரொருவர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்திவெளி பிரதேசத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற பூசகரொருவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையிலேயே  மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஏறாவூர் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Saturday, 17 August 2013 03:37 PM

    மழை விட்டும் தூவானம் விடவில்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X