2025 மே 05, திங்கட்கிழமை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதியில் கடந்த 15ஆம் திகதி  வீடு ஒன்றை உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவரிடமிருந்து 49,400 ரூபா ரொக்கப்பணம், ஒரு வீடியோ கமெரா, ஒரு டிஜிற்றல் கமெரா, 4 வீட்டு உறுதிப்பத்திரங்கள், புதிய ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.

கடந்த 15ஆம் திகதி வீட்டைப் பூட்டி விட்டு கதிர்காமத்திற்கு சென்ற இந்த வீட்டு உரிமையாளர்கள், 16ஆம் திகதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்புறம் உடைக்கப்பட்டு அலுமாரியிலிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவரும் பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையையும்   மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X