2025 மே 05, திங்கட்கிழமை

கிழக்கை கட்டியெழுப்ப இன மத வேறுபாடின்றி செயற்படுகின்றோம்: ஹாபிஸ் நஸீர்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

தற்போது கிழக்கு மாகாண சபையிலுள்ள அனைவரும் கட்சி பேதங்களை மறந்து அபிவிருத்திக்காக மும்முரத்துடன் ஒரு குடும்பம்போல் செயற்பட்டு வருகின்றோம். கிழக்கு மாகாணத்தினைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக நாங்கள் இன, மத, பேத வேறுபாடுகளின்றி, கட்சி வேறுபாடுகளின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகின்றோம்' என கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் தெரிவித்தார்.

'கிழக்கின் மறுமலர்ச்சி' என்ற தொணிப் பொருளின்கீழ் மட்.ஏறாவூர் றஹுமானியா வித்தியாலயத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

'கிழக்கு மாகாண சபையிலுள்ள அனைவரினதும் ஒற்றுமையான செயற்பாடுகள்தான் எமக்குக் கிடைத்த முதலாவது வெற்றியாகும். இதற்கு கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களினதும் ஏனைய திணைக்களங்களினதும் ஒத்துழைப்புக்கள் என்றும் கிடைத்த வண்ணமுள்ளன. ஆனாலும் இதனைக் குழப்புவதற்கு சில தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றன.

அவற்றினையெல்லாம் நம் எதிர்கொண்டு செயற்பட்டு வருகின்றோம். வட மாகாணசபைத் தேர்தல் நிறைவுற்றதும் கிழக்கு மாகாணத்தால் நாம் என்னவெல்லாம் செய்யவுள்ளோம் என்பதனை பொறுத்திருந்து பாருங்கள்.

பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் பேரில் நாம் கிழக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அவர் எமக்கு பல்வேறுபட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றார். அதற்கிணங்க நாங்கள் கிழக்கு மாகாணத்தினை பலவழிகளிலும் கட்டியெழுப்பி வருகின்றோம்.

நான் கிழக்கு மாகாண அமைச்சுப் பொறுப்பினை பொறுப்பேற்ற பின்பு சரியாக 6 மாதங்கள் திட்டமிடுவதாற்காக ஒதுக்கியிருந்தேன். அந்த திட்டமிடலின் செயற்பாடுளை வைத்துக் கொண்டுதான் தற்போது செயற்பட்டு வருகின்றோம்.

கடந்த காலங்களில் 100 ஏக்கர் வயல் நிலத்தில் இருந்து கிடைக்கும் விளைச்சலுக்கு நிகராக தற்போதையை காலகட்டத்தில் 5 ஏக்கரில் இருந்து அதே விளைச்சலைப் பெறக் கூடிய தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

அவற்றினைப் பயன்படுத்த வேண்டும்.  இவ்வாறு புதிய தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உற்பத்திகளை மேற்கொள்பவர்களுக்கு எமது அமைச்சு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்பதோடு கிழக்கு மாகாணத்தில் கிரமங்கள் தோறும் மாதிரி விற்பனை நிலையங்களை அமைப்பதற்கும் எமது அமைச்சு திட்டமிடடுள்ளது' என அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X