2025 மே 06, செவ்வாய்க்கிழமை

உறுப்பினர் கைது எனும் செய்தியை த.ம.வி.பு. கட்சி மறுப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல், தேவ அச்சுதன்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரொருவர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

எமது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்குடன் செயற்படும் சக்திகளினால்  வழங்கப்பட்ட பொய் செய்தி இதுவாகும் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கடந்த காலங்களாக எமது கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தக்கூடியதாக சில சக்திகள் இத்தகைய செயல்களைச் செய்து வருகின்றன.  இத்தகைய செய்தியினை நாம் வண்மையாகக் கண்டிப்பதுடன் எமது கட்சி தொடர்பாக இத்தகைய செய்திகள் வெளிவருகின்றபோது அவற்றின் உண்மைத் தன்மையினை அறிந்து ஊடகங்கள் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X