2025 மே 05, திங்கட்கிழமை

கிரிக்கெட் புள்ளிவிபர பலகை திறப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்
, மாணிக்கப்போடி சசிகுமார்

கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் புள்ளிவிபர பலகை இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானியவிலுள்ள கிளையின் நிதி அனுசரணையில் 16 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புள்ளிவிபர பலகையை மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி திறந்து வைத்தார்.

சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் வவுணதீவு பிரதேச செயலாளருமான கே.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானியவிலுள்ள கிளையின் தலைவர் பி.தவஜோதி, அதன் கலாசார செயலாளர் ஜி.கிறிதரன், பிரித்தானியாவிலுள்ள தமிழ் பாடசாலைகள் விளiயாட்டுக்கழகத்தின் தலைவர் ரி.சுந்தரராஜா, எட்வின் குணரட்னம், சென்ஜோன் அம்புலன் நிறுவனத்தின் மட்டக்களப்பு தலைவர் ஏ.எல்.மீராசாகிபு உட்பட சிவானந்தா தேசிய பாடசாலையின் பழய மாணவர்கள் மற்றும் அதிதிகள் முக்கியஸ்த்தர்கள் சிவானந்தா பாடசாலையின் பழய மாணவர் சங்கத்தின் செயலாளர் எஸ்.ரவீந்திரன், பொருளாளர் எம்.தயா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X