2025 மே 05, திங்கட்கிழமை

குடியேற்றங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல், எஸ்.ரவிந்திரன்


அத்துமீறிய குடியேற்றங்களை வெளியேற்ற கோரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச  செயலக பிரிவிலுள்ள கச்சைக்கொடி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள அரச காணிகளில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய குடியேற்றங்களை வெளியேற்றக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன. செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், கி.துரைராஜசிங்கம், ஞா.கிருஸ்ணபிள்ளை, பிரசன்னா இந்திரகுமார், மா.நடராசா மற்றும் கோ.கருணாகரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சட்டவிரோத காணி சுவீகரிப்பை நிறுத்து, அரச அதிகாரிகளே நில ஆக்கிரமிப்பை நிறுத்துங்கள், ஆளுநரே காணி ஆக்கிரமிப்புக்கு ஆணையிடாதே, சமாதானம் என்ன சாத்தான் ஆக்கிரமிப்பா போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தின் பின்னர் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினத்திடம்  தமிழ் தேசிய கூட்மைப்பினால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.  இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"அம்பாறை - மஹா ஒயா  வீதியின் 19ஆம் மற்றும் 20ஆம் மைல்களிலுள்ள கெவிலியாமடு, புழுகனாவ ஆகிய கிராமங்களில் ஏற்கனவே 15 நிரந்தர வீடுகளும் சில  குடிசைகளும் அரசாங்க காணியில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக மேலும் 21 நிரந்தர வீடுகளுக்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பௌத்த பிக்குவினால் முன்நின்று இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்க காணிகளில்  சட்டவிரோதமாக அபகரிப்பு இடம்பெறுமானால் அதனை தடுக்க வேண்டியது மற்றும் அதற்கு எதிராக நடவடிக்கை  எடுக்க வேண்டியது பிரதேச செயலாளரின் கடமையாகும்.

அதற்கான அதிகாரமும் உண்டு. இந்த நிலையில் அத்துமீறி அரசாங்க காணிகளை அபகரித்திருப்பவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொட்டில்களும்; நிரந்தர கட்டிடங்களும் அகற்றப்பட வேண்டும். குறித்த அத்துமீறல்கள் விடயத்தில் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமைக்கு காரணம் ஏதாவது அழுத்தங்களாக கூட  இருக்கலாம் என்ற சந்தேகம் கூட  சந்தேகிக்கின்றோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • Nilavan Wednesday, 21 August 2013 06:41 AM

    இதுதானா மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வாக்கு? மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஒரே சன நெருக்கடி போல. உங்கள் அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதற்கு இனிமேல் மக்கள் இடமளிக்கமாட்டார்கள். அறிக்கையில் உங்கள் வீர செயல்களை காட்டியிருக்கலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X