2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நிரந்தரத்தீர்வு கிடைக்காவிடின் போராட்டங்கள் வெடிக்கும்: அரியநேத்திரன் எம்.பி.

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

'எங்களுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்காவிடின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்தில் மாத்திரமின்றி மாவட்டத்தின் நாலா பக்கமும் ஆர்ப்பாட்டங்களும் சாத்வீகப் போராட்டங்களும் வெடிக்கும் என்பதனை நாம் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்' மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

 'அத்துமீறிய சிங்கள மக்களின் குடியேற்றத்திற்கும் காணி அபகரிப்புக்களுக்கும் எங்களுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்காவிடின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்தில் மாத்திரமின்றி மாவட்டத்தின் நாலாபக்கமும் ஆர்ப்பாட்டங்களும் சாத்வீகப் போராட்டங்களும் வெடிக்கும் என்பதனை நாம் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்' எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பட்டிப்பளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட காணி அபகரிப்பு மற்றும் அத்துமீறிய குடியேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பௌத்த குரு ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநரின் வாய்ச்சொல் அனுமதியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் அமைந்துள்ள பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவுளியாமடு மற்றும் புழுக்குனாவை போன்ற கிராமங்களில் அத்துமீறி சிங்கள மக்களின் குடியேற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றார்.

இந்த சட்டவிரோதச் செயல் நிறுத்தப்படல் வேண்டும். அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்ற நோக்கத்திற்காகவேதான் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப் பட்டிருக்கின்றது.  இது யாரையும் புன்படுத்துவதற்கோ கொச்சைப் படுத்துவதற்கோ இல்லை.

ஆனால் இந்தநாட்டில் சட்டம் ஒன்று இடம்பெறுவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் காணி அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு சட்டம் என்பது இந்த நாட்டில் இல்லாமல் இருந்து கொண்டிருக்கின்றது.

எங்கள் மக்களை சுதந்திரமாக வாழவிடுங்கள் என்றுகூறிதான் இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். 
இதற்கு எங்களுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்காவிடின் மட்டக்களப்பு மாவட்டதின் பட்டிப்பளை பிரதேசத்தில் மாத்திரமின்றி மாவட்டத்தின் நாலா பக்கமும் ஆர்ப்பாட்டங்களும் சாத்வீகப் போராட்டங்களும் வெடிக்கும் என்பதனை நாம் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்' எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X