2025 மே 05, திங்கட்கிழமை

பட்டதாரிப் பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம்: விநாயகமூர்;த்தி முரளிதரன்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணியாற்றி வருபவர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான நிரந்தர நியமனங்கள் செப்டெம்பர் முதலாம் திகதி கிடைக்கப்பெறும்' என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் அரச அலுவலகங்களில் கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் பட்டதாரிப் பயிலுனர்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

'பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ளவர்களுக்கு செப்டெம்பர் முதலாம் திகதியும், ஏனைய அமைச்சுக்களில் உள்ளீர்க்கப்பட்டவர்களுக்கு கட்டங்கட்டமாகவும் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

பல்வேறு பிரச்சிகைளுக்கு மத்தியில் இந்த பட்டதாரிகளின் நியமனங்கள் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் வழங்கப்பட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமாவை நிறைவு செய்தவர்களுக்கு ஏனைய மாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பட்டதாரி நியமனங்களின் போது அரசாங்க அதிபர் மிகவும் சிரத்தையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டிருந்தார்.

அதனாலேயே அனைத்து பட்டதாரிகளையும் நியமனங்களுக்குள் உள்வாங்க முடிந்தது. அத்துடன் அவருடைய மாவட்டத்தின் அபிவிருத்திசார் ஒத்துழைப்புகளுக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதேநேரம் வாய்ப்புக்ளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற விடயத்தில் நமக்கிருக்கும் அரசியல்பலமே முக்கியமானதாகும். எமது மக்கள் அரசியல் பலத்தினை பயன்படுத்தாமல் விடுவது கவலையான விடயமாகும். கடந்த தேர்தலில் பட்டதாரிகளாகிய நீங்கள் கூட சிந்தித்து வாக்களிக்கவில்லை.

அரசியலானது  கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அபிவிருத்தி, சுகாதாரம் என அனைத்து விடயங்களிலும் பங்களிப்புச் செய்யக் கூடியதாகும். அதனால்தான் அரசியலை அரசியல் விஞ்ஞானம் என்று கூறுகிறார்கள்.

அந்த விஞ்ஞானத்தை சிந்தித்துப் பயன்படுத்துபவர்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதனை மட்டக்களப்பு மாவட்டத்தை வைத்து மாத்திரமே நீங்கள் சிந்தித்துப்பார்க்க முடியும். கடந்த காலங்களின் வரலாறுகளை எடுத்துப்பார்தீர்களானால், ஆளும் கட்சி அரசியல்வாதிகளாலேயே அபவிருத்திகள் பலமேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X