2025 மே 05, திங்கட்கிழமை

காத்தான்குடி காதி நீதிமன்றம் சனிக்கிழமை திறக்கப்படும்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி காதி நீதிமன்றம் எதிர்வரும் சனிக்கிழமை (24) காலை திறக்கப்படுமென காத்தான்குடி காதி நீதிமன்றத்தின் புதிய காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி தெரிவித்தார்.

'பிரதி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் காலை தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை காத்தான்குடி காதி நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெறும். இதுதவிர வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் காலை தொடக்கம் பிற்பகல் வரை காதி நீதிபதியை காத்தான்குடி காதி நீதிமன்றக்கட்டிடத்தில் சந்திக்க முடியும்' எனவும் புதிய காதிநீதிபதி தெரிவித்தார்.

விவாக விவாகரத்து பிரச்சினைகள் தொடர்பாக தொலைபேசியில் தொடர்புகொள்வதையும் தனது வீட்டுக்கு வந்து சந்திப்பதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் புதிய காதி நீதிபதி அறிவித்துள்ளார்.

காதிநீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெறும்போது வாதி மற்றும் பிரதிவாதி சார்பில் தலா ஒருவர் மாத்திரமே இருக்க வேண்டுமெனவும் காதி நீதிமன்றத்தில் கணவன் மனைவி தனித்தனியே விசாரணை செய்யப்படுவர் எனவும் புதிய காதிநீதிபதி தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி காதி நீதிமன்றத்திற்கு வரும் பெண்கள் இஸ்லாமிய கலாசார உடையுடன் வருமாறும் காத்தான்குடி புதிய காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி மேலும் அறிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X