2025 மே 05, திங்கட்கிழமை

கால்நடை வளர்ப்போருக்கு கூட்டம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில்  கால்நடை வளர்ப்போருக்கான கூட்டம் அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தின்போது, கால்நடைகளை பாதுகாப்பாகவும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் கால்நடைகளை வளர்த்துக்கொள்ளுதல்,  கால்நடைகளிலிருந்து பொருளாதார நன்மை பெறக்கூடியதாக வளர்த்துக்கொள்ளுதல் ஆகியன தொடர்பில்; ஆலோசனைகளும் திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.

மேலும், இம்முறை பெரும்போகச் செய்கையின்போது பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளை  அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மாவிலாறு, தட்டாத்திக்குடா, கட்டாக்காடு போன்ற மேய்ச்சல் தரைகளுக்கு அப்புறப்படுத்த வேண்டுமெனவும் பணிக்கப்பட்டுள்ளது.

கட்டாக்காலி கால்நடைகளால் மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் அவ்வப்போது ஏற்படுகின்ற வீதி விபத்துக்கள் தொடர்பில் சுட்டிக்காட்டிய சேருநுவர பொலிஸார், இது தொடர்பில் அக்கறையின்றியுள்ள கால்நடை வளர்ப்போருக்கு எச்சரித்துள்ளனர்.

வெருகல் பிரதேச செயலாளர்  பி.தனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கால்நடை அபிவிருத்தி அதிகாரிகள், மிருக வைத்தியர்கள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், பண்ணையாளர்கள், விவசாயிகள், பொலிஸ் மற்றும் படை அதிகாரிகள் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X