2025 மே 05, திங்கட்கிழமை

மாவட்ட எல்லை பிரச்சினையை தீரக்க நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் எல்லை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் இடையில் நிலவிவரும் எல்லை பிரச்சினைகள் காரணமாக பொதுமக்கள் நிர்வாக ரீதியில் பல கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக எல்லை பகுதியில் அம்பாறை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததன் காரணமாக நிர்வாகம் மேற்கொள்ளும் அதிகாரிகளும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிவந்தனர்.

இது தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதிலும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையே இருந்து வந்தது.

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் என்பனவற்றில் இது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே இருந்துவந்தது.

இந்த வகையில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் எல்லைப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் இரு மாவட்டங்களின் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதுடன் எல்லைப ;பகுதிகளையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X