2025 மே 05, திங்கட்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நடத்தும் முன்பள்ளி பருவ அபிவிருத்தி தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இதன் முதல் நிகழ்வு 26ஆம் திகதி காலை நடைபெறவுள்ளது. இதில் வவுணதீவு, மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனைப்பற்று, போரதீவுப்பற்று, மண்முனைத் தென்மேற்கு, மண்முனை தென்எருவில்பற்று, உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் பங்குபெற முடியும்.

மேலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஏறாவூர்ப்பற்று, ஏறாவூர் நகர், கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று வடக்கு உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு செயலமர்வு நடைபெறவுள்ளது.

செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திலும் செப்டெம்பர் மாதம்; 10ஆம் திகதி பட்டிப்பளை பிரதேச செயலகத்திலும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட முன்பள்ளி அபிவிருத்தி இணைப்பாளர் வி.முரளிதரன் தெரிவித்தார்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X