2025 மே 05, திங்கட்கிழமை

கிணற்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
, க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து கைக்குண்டு ஒன்றைப் பொலிஸார் சற்று முன்னர் மீட்டுள்ளனர்.

ஏறாவூர், 3 ஆம் குறிச்சிப் பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டது.

வீட்டுக்காரர் கிணற்றைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது மாட்டெலும்புகள் உட்பட ஏனைய கழிவுகளுடன் இந்த கைக்குண்டும் காணப்பட்டுள்ளது.

உடனடியாக ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவித்ததன் பேரில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்படி கைக்குண்டை மீட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின்பேரில் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு இந்தக் குண்டை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X