2025 மே 05, திங்கட்கிழமை

கடலில் தவறிவிழுந்த மீனவரை காணவில்லை

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு ஓட்டமாவடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் புல்மோட்டை கடலில்  தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாலைநகர் ஓட்டமாவடியைச் சேர்ந்த நூர்முகம்மது நியாஸ் வயது (31) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கடலில் தவறி வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவர் கடந்த வியாழக்கிழமையன்று ஆழ்கடல் மீன்பிடிப் படகில் 3 பேர்களுடன் புல்மோடடை கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தார். இதன் போதே கடலுக்குள் தவறிவிழுந்துள்ளார்.

இவரை காப்பற்றுவதற்கு படகில் இருந்த சக மீனவர்கள்  கயிறினை எறிந்தும் முயற்;சி செய்த போதும் பலனின்றி போயுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X