2025 மே 05, திங்கட்கிழமை

பெண்கள் சுய தொழில் முயாற்சியான்மை அமைப்பு அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் சுய தொழில் முயாற்சியான்மை அமைப்பு ஒன்று நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு காவியா பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இவ்வமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் காவியா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிபபாளர் திருமதி யோகமலர் அஜித்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் சர்வதேச தொழிலாளர் ஸ்த்தாபனத்தின் தேசிய இணைப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம் உட்பட முக்கியஸ்த்தர்கள் மற்றும் காவியா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு, மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள பெண் சுய தொழில் முயற்சியாளர்களை உள்ளடக்கி இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுதத்தத்தினால் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு கனவனை இழந்த விதைவைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களினது வாழ்வாதரம் சுயதொழில் சுயற்சி போன்ற வைகளில் இவ்வமைப்பு கூடிய கவனம் செயலுத்தவுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X