2025 மே 05, திங்கட்கிழமை

பிறைந்துரைச்சேனையில் வீடு தீக்கிரை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, பிறைந்துரைச்சேனை பன்ஸல முதலாம் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில் திடீர் என ஏற்பட்ட தீ விபத்தினால் அவ் வீடு முற்றாக எரிந்துள்ளது.

கல்லால் கட்டப்பட்டு கிடுகினால் கூறையிடப்பட்ட இவ் வீட்டில் தாயும் நான்கு பிள்ளைகளும் வசித்து வந்துள்ளனர்.

இன்று மதியம் 12.30 மணியளவில்; ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக எரிந்துள்ளதுடன் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்துள்ளன.

இத் தீ விபத்து தற்செயலாக இடம்பெற்றுள்ளதா அல்லது கோபத்தில் யாராவது தீ வைத்தார்களா என்ற சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X