2025 மே 05, திங்கட்கிழமை

வீடு உடைத்து தங்கநகை கொள்ளை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்தில்  சேர்மன் வீதியிலுள்ள வீடொன்று  உடைக்கப்பட்டு தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸில் வீட்டு உரிமையாளர் நேற்று சனிக்கிழமை இரவு முறைப்பாடு செய்துள்ளார்;.

இவ்வீட்டின் உரிமையாளர்கள், அவர்களின் உறவினரொருவரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மீண்டும் தங்களது வீட்டிற்கு வந்து பார்த்தபோது  வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டுக்  காணப்பட்டதுடன், வீட்டு அறையிலுள்ள அலுமாரியிலிருந்து 3 பவுண் தங்கநகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணையை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X