2025 மே 05, திங்கட்கிழமை

படகிலிருந்து தவறி விழுந்த மீனவரை தொடர்ந்து தேடும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

படகிலிருந்து தவறி விழுந்த நிலையில் காணாமல் போன மீனவரை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் சம்மேளன தலைவர் ஏசி.எம்.முனவ்வர் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இந்த மீனவர், நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் படகிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

இந்த மீனவர்  படகிலிருந்து தவறி விழுந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸில் படகு உரிமையாளர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்திருந்தார்.

மீள்குடியேற்றக் கிராமமான பாலை நகர் றகுமானியா பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான நூறு முஹம்மது நியாஸ் (வயது 31) என்பவரே படகிலிருந்து தவறி விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். 

படகிலிருந்து தவறி விழுந்து காணமல் போன இந்த மீனவரை தேடும் நடவடிக்கைகள் கடற்படையினரின் உதவியுடன் 3 படகுகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த மீனவர் தொடர்பில் இதுவரையில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் சம்மேளனத் தலைவர் ஏசி.எம்.முனவ்வர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X