2025 மே 05, திங்கட்கிழமை

தம்பிக்காக புலமைப்பரிசில் பரீட்சையை தவறவிட்ட அக்கா

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

தனது தம்பிக்காக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை அவரது அக்கா தவறவிட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்தமுறை நடைபெற்று முடிவடைந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றாமல் வீடுகளில் மறைந்திருந்ததாகக் கூறப்படும் 7 மாணவர்களை பொலிஸார்; அழைத்துச்சென்று பரீட்சை நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவிலேயே இந்தச் சம்பவங்கள் பரீட்சை தினமான நேற்று இடம்பெற்றுளளது என்று  கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது  மாணவர்கள் சிலர் பரீட்சை  நிலையத்திற்கு சமூகமளிக்காத நிலைமை காணப்பட்டது.

இது தொடர்பில் பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் பாதுகாப்புக் கடமைக்கு வந்த பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து கல்குடா பொலிஸார் இப்பகுதி சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உதவியுடன் இந்த  மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை பரீட்சை நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

இது இவ்வாறிருக்க, ஒரு வீட்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்  பரீட்சைக்கு தோற்றும் மாணவி ஒருவர் தனது தாய் வீட்டில் இல்லாததன் காரணமாக தானே தனது இளைய தம்பியை பாராமரித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், பொலிஸார் இந்தச் சிறுமியை மாத்திரம் விட்டுவிட்டு ஏனைய 7 மாணவர்களையும் பரீட்சை நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Monday, 26 August 2013 02:52 PM

    பாவம் அந்த ஏழு பிள்ளைகளும் அன்று எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பார்கள். பொலிஸாரும் ஏனையவர்களும் பிள்ளைகளின் நிம்மதியைக் கெடுத்துவிட்டார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X