2025 மே 05, திங்கட்கிழமை

கல்லடி வாவியில் அதிளவான இறால்கள் பிடிபடுகின்றன

Super User   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, கல்லடி வாவியில் கடந்த ஒரு சில தினங்களாக அதிளவான இறால்கள் பிடிபடுகின்றன. வாவியில் இறால்கள் பிடிப்பதற்காக அதிகளவான தோணிகள் ஈடுபட்டு வருகின்றன. தினமும் காலை வேளை மற்றும் முற்பகலிலேயே இந்த இறால்கள் பிடிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மீனவர்கள் மட்டக்களப்பு கல்லடி புதிய மற்றும் பழைய பாலங்களை அண்டிய வாவிகளிலேயே இந்த இறால் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான இறால்கள் பிடிக்கப்படுவதால் 750 ரூபாவுக்கு விற்பனை செய்த ஒரு கிலோ இறால் தற்போது 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஜோர்ஜ் தெரிவித்தார்.

அதேபோன்று இங்கு பிடிக்கப்படும் இறால் உள்ளுரில் விற்பனை செய்யப்படுவதுடன் வெளி பிரதேசங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X