2025 மே 05, திங்கட்கிழமை

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் இராஜதந்திரிகள் மட்டு. விஜயம்

Super User   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மட்டு. மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த விஜயம் குறித்த முன்னேற்பாடுகளை ஆராய்வதற்காக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் குழுவொன்று இன்று செவ்வாய்க்கிழi மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளது.

இந்த குழுவில் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவின் தலைமை அதிகாரி டயனியல் பீட்டர் மற்றும் அரசியல் பிரிவு அதிகாரி மஹிந்திரா ரட்ணவீர ஆகியோரே சென்றுள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு மாநகர சபை, வழிபாட்டு தலங்கள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களின் செயலகங்கள் ஆகியவற்று விஜயம் மேற்கொண்டு பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X