2025 மே 05, திங்கட்கிழமை

வாகரைக்கு ஜனாதிபதி விஜயம்

Super User   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ எதிர்வரும் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாகரை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

வாகரை, பனிச்சங்கேனியில் நிர்மானிக்கப்பட்டுள்ள புதிய பாலத்தினை ஜனாதிபதி இதன்போது திறந்துவைக்கவுள்ளார்.
ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் 950 மில்லியன் ரூபா செலவில் இலங்கை அரசாங்கத்தினால் இந்த பனிச்சங்கேனிப் பாலம் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வாகரை புனித பேதுருவானவரின் தேவாலயத் திறப்பு விழாவும் திருவிழா திருப்பலி நிகழ்வும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ளது.

இந்த நிகழவில் ஜனாதிபதி மஹிந்த ராஜகப்ச கலந்துகொள்ளவுள்ளார். கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த நவநாள் திருவிழா எதிர்வரும் 1ஆம் திகதி திருவிழாக் கூட்டுத்திருப்பலியுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வாகரை பேருவானவரின் ஆலயம் 2004ஆம் ஆண்டு சுனாமியில் முழுமையாக பாதிக்கப்பட்டு தற்போது புதிதாக அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X