2025 மே 05, திங்கட்கிழமை

பாங்கொக் பயணமாகிறார் மட்டு.அரசாங்க அதிபர்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

தாய்லாந்தின் பங்கொக்கில் செப்டெம்பர் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையில் நடைபெறும் அனர்த்தங்களிலிருந்து மீளெழும்பலுக்கான தலைமைத்துவ பயிற்சிப்பட்டறையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொள்கிறார்.

பூகோள அனர்த்தங்களிலிருந்து மீளெழும்பலுக்கான தலைமைத்துவக் கற்கைநெறித் திட்டத்தின் இரணடாவது பயிற்சிப் பட்டறையே பாங்கொக்கில் நடைபெறுகிறது.

இதன் முதல் கட்டம் கடந்த யூன் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை கண்டியில் நடைபெற்றிருந்தது.

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிறுவனம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானக் பட்டமேற் கற்கைகள் பிரிவு மற்றும் அமெரிக்க அனர்த்த மீளெழும்பலுக்கான தலைமைத்துவ கற்கைகள் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X