2025 மே 05, திங்கட்கிழமை

வங்கி அதிகாரி உயிரிழப்பு; கேள்வியுற்று ஆட்டோ சாரதி அதிர்ச்சி

Super User   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.ருத்திரன்

ஏறாவூர் நகரில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி மற்றும் துவிச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வங்கி முகாமையாளர் நண்பகல் வேளையில் மரணமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏறாவூரைச் சேர்ந்த முஹம்மது காஸிம் முஹம்மது பாறூக் எனும் வாழைச்சேனை மக்கள் வங்கி முகாமையாளர் உயரிழந்துள்ளார்.

இதேவேளை ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த முச்சக்கரவண்டி சாரதியான நாகூர் சஹாப்தீன் (வயது 42) என்பவர் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன விபத்தில் சிக்கிய வங்கி முகாமையாளர் மரணமடைந்த செய்தியைக் கேள்விப்பட்டதுமே முச்சக்கரவண்டி சாரதி திடீரென அதிர்ச்சியடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X