2025 மே 05, திங்கட்கிழமை

கித்துள, உறுகாமம் குளங்களை இணைக்க அனுமதி: முரளிதரன்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்,எல்.தேவ அச்சுதன்

கித்துள் மற்றும் உறுகாமம் ஆகிய இரு குளங்களையும் இணைக்கும் திட்டத்திற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதன் வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்பவுள்ளதாகவும் மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இந்த இரண்டு குளங்களும் இணைக்கப்படுவதன் மூலம் சித்தாண்டி முதல் கிரான் வரையிலுள்ள பல கிராமங்களில் வருடாவருடம் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், சிறுபோக பெரும் போக விவசாயங்கள் அதிகமான காணிகளில் செய்கைபண்ணமுடியும் என்பதுடன் உப-உணவுப் பயிர்ச்செய்கைகளையும் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீர்ப்பாசன அமைச்சில் அதன் செயலாளர் ஐவன் சில்வாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்தே இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நீர்ப்பாசன திணைக்களம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கித்துள் மற்றும் உறுகாமம் குளங்களினை இணைக்கும் செயற்றிட்டம் தொடர்பான சாத்தியவள ஆய்வினை அவுஸ்திரேலிய நிறுவனம் மேற்கொண்டிருந்தது, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இது தொடர்பிலான கலந்துரையாடலிலும் இரண்டு குளங்களினதும் இணைப்பினால் ஏற்படும் பயன்கள் குறித்து தெளிவுபடுத்தியிருந்ததாகவும் தெரிவித்தார்.

கித்துள் மற்றும் உறுகாமம் ஆகிய இரு குளங்களையும் இணைக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கித்துள் குளப் பிரதேசத்திற்கு கடந்த யூன் 5ஆம்திகதி நீர்ப்பாசன மற்றும்நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபல டி சில்வா,தனது அழைப்பின் பேரில் வருகை தந்திருந்தார்.

அதன் போது, அமைச்சர், பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.மோகனராஜா மற்றும் பொறியியலாளர்கள், பொது மக்களுடன் கலந்துரையாடினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X