2025 மே 05, திங்கட்கிழமை

நல்ல இன ஆடுகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசாவின்; பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு நல்ல இன ஆடுகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன. 

சுமார் 15,000 ரூபா பெறுமதியான ஆடுகள் களுவாஞ்சிகுடி கால்நடை வைத்திய அலுவலகத்தினூடாக வழங்கப்பட்டடன.
எருவில் கிராமத்தினைச் சேர்ந்த சவுந்தராதேவி-பஞ்சாட்சரம், கிருஷ்ணபிள்ளை -  சகாதேவன் ஆகியோருக்கு முதற்கட்டமாக இந்த ஆடுகள் வளங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா, களுவாஞ்சிகுடி கால்டை வைத்தியசாலையின் வைத்தியர் முகுந்தன், கால்நடை வைத்திய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி கே.சிவானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X