2025 மே 05, திங்கட்கிழமை

லேடி மெனிங் றைவை அழகுபடுத்துவதற்கான சிரமதானப்பணி முன்னெடுப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன், ரி. எல். ஜவ்பர்கான்


மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொலிஸாரும் லேடிமெனிங் றைவில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாநகரசபை சுத்திகரிப்பு ஊழியர்களும் இணைந்து சிரமதானப்பணியை இன்று சனிக்கிழமை மேற்கொண்டனர்.

லேடி மெனிங் றைவை அழகுபடுத்துவோம் எனும் தலைப்பில் கல்லடிப்பாலத்திலிருந்து கோட்டைமுனைப்பாலம் வரையுள்ள 1 . 2 கி;.மீ நீளமான ஆற்றங்கரைப் பிரதேசத்திலே இந்த சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 302 பேர் இந்த சிரமதானப்பணியில் பங்கேற்றனர்.

கிழக்குப்பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்ற இந்த சிரமதானப்பணியில் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹக்மன , வாழைச்சேனை  உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ண,   தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X