2025 மே 05, திங்கட்கிழமை

கிராமிய உற்பத்திகளுக்கு தேசிய சந்தை வாய்ப்பு; செயலாளர்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கிராமிய உற்பத்திகளுக்கு தேசிய சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சரோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார்.

மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஊடாக கைவினைத்திறன் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டுள்ள யுவதிகளுக்கான சான்றிழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஏறாவூர் நகர பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வீட்டு அலங்காரங்கள்இ உடுதுணிகள் தயாரிப்புஇ தாவர உற்பத்திஇ மளிகைப் பொருட்கள் மற்றும் இன்னோரன்ன நுட்பம் சார்ந்த தொழிற் துறைகளில் பயிற்சியை நிறைவு செய்து உற்பத்தியைத் ஆரம்பித்துள்ள சுமார் 40 யுவதிகளுக்கு இந்நிகழ்வின்போது சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

 நிகழ்வில் சான்றிதழ்களை வழங்கி வைத்து உரையாற்றிய மாவட்ட செயலாளர் சரோஜினிதேவி 'பெண்களுடைய திறமைகளை வெளிப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாக இதனைப் பார்க்கும்போது இதற்கென ஒரு தேசிய சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்' என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

'உள்ளுர் உற்பத்திகளின் தேசிய ரீதியிலான விரிவு படுத்தலுக்காக மாவட்ட மட்டத்திலே விரைவில் அதற்கான திட்டமிடல் இடம்பெறப்போகின்றது. அதன் மூலமாக கை வினைத்திறனில் ஈடுபட்டுள்ள இந்தக் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்திலே ஒரு சிறந்த நிலைக்குச் செல்ல முடியும். தமது உற்பத்திகளை அவர்கள் தேசிய மட்டத்திற்கு எடுத்துச் சென்று பிரபல்யப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.' என்றும் அவர் நிகழ்வில் உரையாற்றியபோது உறுதி வழங்கினார்.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக ஏறாவூர் நகர பிரதேச செயலகமும் இணைந்து யுவதிகளுக்கான கைவினைத் திறன் உற்பத்தித் தொழிற்துறைப் பயிற்சிகளை வழங்கியிருந்தன.

கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே. அருந்தவராஜாஇ ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபாஇ உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஸா கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. முஹம்மத்இ ஏறாவூர் நகரசபை பிரதி மேயர் எம்.ஐ.எம். தஸ்லீம் உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளும் ஏராளமான பொது மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X