2025 மே 05, திங்கட்கிழமை

யுத்தத்தில் கொல்லப்பட்ட பொலிஸாரின் குடும்பங்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்


யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட உயர் மட்ட மாநாடு இன்று நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை, கந்தளாய் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரிவுகளில் படுகொலை செய்யப்பட்ட பொலிஸாரின் குடும்ப உறவினர்கள் இம்மாநாட்டில் பங்கு கொண்டனர்.

திருகோணமலை மற்றும் கந்தளாய் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ்திணைக்கள் கணக்காளர்கள், பொலிஸ் நலன்புரி அதிகாரிகள் உட்பட பலரும்  கலந்து கொண்டனர்.

மேற்படி குடும்பத்தினரின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அடங்கலான பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X