2025 மே 05, திங்கட்கிழமை

ஸ்ரீ போதிராஜ விகாரைக்கு அல் - கிம்மா அமைப்பினால் உதவி

Super User   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  மயிலம்கரைச்சை மீள்குடியேற்ற கிராமத்திலுள்ள ஸ்ரீபோதி ராஜ விகாரையில் தங்குமிடம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த தங்குமிட அமைப்பிற்கு தேவையான சீமெந்து பக்கற்றுகளை கல்குடா அல் - கிம்மா நிறுவனத்தினால் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறூன், கிம்மா நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் எச்.எம்.எம்.ஹனீபா ஆகியோர் விகாரையின் விகாராதிபதி மஹிந்த லங்கார தேரோவிடம் சீமெந்து பக்கற்றுக்களை வழங்கி வைத்தனர்.

இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் அனைத்து இன மக்களுக்குமாக அல் கிம்மா சமுக சேவைகள் அமைப்பு தங்களது சேவைகளைச் செய்து வருவதாக அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.  ஹாறூன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • mattakkalappaan Monday, 02 September 2013 03:23 AM

    வரவேற்க வேண்டிய முன்னுதாரணமான விடயம். அல்-கிம்மா சேவை வழர்க....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X