2025 மே 05, திங்கட்கிழமை

பொலிஸ் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்

பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 147ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் பொலிஸ் நடமாடும் சேவை  நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொதுமக்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  நடமாடும் சேவையில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இதன்போது இரத்ததானம்  நிகழ்வு இடம்பெற்றது. மேலும்,  திவிநெகும திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் டெங்கு விழிப்பூட்டல் நிகழ்வு, வீதிப்  போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினால் வீதி போக்குவரத்து விதிமுறை பற்றிய விழிப்பூட்டல் நிகழ்வு,  தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள், கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், ஆயுர்வேத மருத்துவசேவைகள் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X