2025 மே 05, திங்கட்கிழமை

பழைய குப்பைகளை கிளறமாட்டேன்: ஜனாதிபதி

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 01 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

'பழைய காயங்களை நினைவில் வைத்துக்கொள்வதால் தேசிய ஒற்றுமையை பேண முடியாது. பழைய குப்பைகளைக் கிளறுபவன் நானில்லை. எந்தவொரு விடயத்தினையும் புத்திசாதுர்யத்துடனும் தெளிவாகவும் தேடியறிதல் வேண்டும்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஒலுவில் துறைமுகத்தை சற்றுமுன்னர் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"கடந்த கால சம்பவங்கள  நினைவுட்டி மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தினை கட்டியெழுப்ப முடியாது. வடக்காக இருந்தாலும் சரி, தெற்காக இருந்தாலும் சரி சகல மக்களின் தேவைகளையும் நிறைவேற்ற அரசாங்கம் தயாராகவுள்ளது.

அரசாங்கம் வங்கிகளை விற்பனை செய்வதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. இவ்வாறான வதந்திகளை எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றனர். இது விற்பனை செய்யும் யுகமல்ல. விற்பனை செய்தவகைகளை மீளப்பொறுப்பேற்கும் யுகமாகும். எதிர்க்கட்சிகள் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறான போலிப்பிரசாரங்களை மக்கள் நம்ப வேண்டாம்” என்றார்.

அங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி கூறுகையில், “எமக்குள் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற இனவாத அரசியல் இனிமேல் வேண்டாம். குறுகிய எண்ணம் ஒரு நாளும் வேண்டாம், எந்தத் தீர்மானம் எடுத்தாலும் நாம் புத்தியோடு செயற்பட வேண்டும்.

இன்று உங்கள் முன் பேசக்கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். முன்னாள் அமைச்சர் எனது நண்பர் எம்.எச்.எம்.அஷ்ரப் இப்போது நம் மத்தியில் இல்லையென்பதுதான் கவலை. கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் பல அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளோம். செய்தும் வருகின்றோம்.

மூவின மக்களும் வாழும் மாவட்டம்தான் இந்த மாவட்டம். உங்களது பிரதேசங்களில் கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, பாலங்கள் உட்பட சகல துறைகளையும் அபிவிருத்தி கண்டுவருகின்றது. இந்த துறைமுகத்தின் மூலம் பல நன்மைகள் இப்பிரதேச மக்களுக்கு கிடைக்கவுள்ளது. இனிமேல் உங்களது பிரதேசம் கஷ்டமான பிரதேசமாக இருக்க முடியாது.

நாடு புராகவும் பல துறைமுகங்களை அபிவிருத்தி செய்துள்ளோம். ஆனால், ஒலுவில் துறைமுகத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகின்றேன். நமக்குள் எந்த வேறுபாடுகளும் இருக்கக்கூடாது. நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் போல் ஒற்றுமையாக வாழவேண்டும்” என்றார்.
 
இந்நிகழ்வில் துறைமுகங்கள் அபிவிருத்தி கருத்திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன, சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர் எம்.டி.எஸ்.குணவர்த்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், கிழக்கு மாகாண ஆளுநனர் மொஹான் விஜேவிக்ரம, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சிறியாணி விஜேவிக்ரம, பி.எச்.பியசேன, எம்.எச்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பௌத்த, கத்தோலிக்க, இந்து, முஸ்லிம் மதத்தலைவர்கள், இலங்கை துறைமுக அதிகாரசபையின் உயர் அதிகாரிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

மறைந்த முன்னாள் கப்பற்துறை, துறைமுகங்கள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் எண்ணத்தில் அடித்தளமிடப்பட்ட இத்துறைமுகப் பணிகள் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

டென்மார்க் நிறுவனமாக எம்.ரி.ஹோஜ்காட் என்னும் நிறுவனத்தின் மூலம் நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மீன்பிடி மற்றும் வர்த்தக துறைமுகம் இதுவாகும்.  இத்துறைமுகம், கொழும்பிலிருந்து 370 கிலோமீற்றர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது. மூவாயிரம் தொன் நிறையுடைய பாரிய கப்பல்கள் இந்த துறைமுகத்தில் நங்கூரமிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • VALLARASU. Sunday, 01 September 2013 04:45 PM

    பழைய பள்ளிகளை எல்லாம் உடைக்க நான் இனி அனுமதிக்க மாட்டேன் . இதற்கு ஒலுவில், பாலமுனை மக்கள் நாரே தக்பீர் சொன்னார்களாமே?

    Reply : 0       0

    VALLARASU Sunday, 01 September 2013 04:56 PM

    ஐயா, உங்க நாடகத்தின் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் வந்துள்ளாரே... செந்தில் வரவில்லையா? ஒஹோ... செந்தில் வந்தால் கவுண்டமணி உதைத்து விடுவாரோடு? பக்கத்தில வில்லன் நெப்போலியன் இருக்கும் போது என்ன பயம்...

    Reply : 0       0

    SH Monday, 02 September 2013 11:27 AM

    பழைய குப்பைகளை கிளறினால் உங்கள் நாற்றங்கள் வெளிப்பாட்டு விடுமோ என்ற பயமோ !!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X