2025 மே 05, திங்கட்கிழமை

மட்டு. கூட்டுறவுச் சங்கங்களை மேம்படுத்த நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களை மேம்படுத்த மாவட்ட கூட்டுறவுச்சபை மற்றும் கூட்டுறவுத்திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் நிருவாக நடைமுறைகள் தொடர்பான ஒரு நாள் அறிவூட்டல் செயலமர்வொன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச்சபை மற்றும் கூட்டுறவுத்திணைக்களத்தின் மடடக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் அலுவலகம் என்பன இந்த அறிவூட்டல் செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச்சபையின் தலைவர் இ.இராயப்பு மற்றும் மடடக்களப்பு மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் கே.கணகசுந்தரம், கூட்டுறவு பரிசோதகர் இ.அமல்ராஜ் உட்பட மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் மற்றும் நிருவாகிகள் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X