2025 மே 05, திங்கட்கிழமை

சகல மதத்தவர்களதும் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை: ஜனாதிபதி

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சகல மதங்களையும் சார்ந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தற்போதைய அரசாங்கம் சகல மதங்களையும் சமமாக கருதுகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வாகரையில் சேதமடைந்திருந்த புனித கிறிஸ்தவ தேவாலயம் புனரமைக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'அமைதியும் சகவாழ்வும் முக்கியமானதாகும். சகலரும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலம் அமைதியான, சுதந்திரமான நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.

வைராக்கியம், குரோதம் என்னும் மனப்பாங்குகளை கைவிட்டு அமைதியாகவும் ஐக்கியமாகவும் சகவாழ்வுடன் வாழ வேண்டும். சமயத் தலைவர்கள் போதித்தவை அன்றைய காலத்தை விட இன்று மிகவும் முக்கியமானதாக உள்ளது.

கடந்த 30 வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த வாகரைப் பிரதேசம் துரிதமான அபிவிருத்தி முன்னேற்றத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு சகல மதத் தலைவர்களுக்கும் இருக்கின்றது' என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் பசீர் சேகுதாவூத், பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X