2025 மே 05, திங்கட்கிழமை

திட்டமிட்ட குடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரிக்கை

Super User   / 2013 செப்டெம்பர் 02 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட குடியேற்றங்களை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் மாகாண காணி ஆணையாளரிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாகாண காணி ஆணையாளருக்கு மாகாண சபை உறுப்பினர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"2004ஆம் ஆண்டுக்குப் பிறகு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எல்லைக் கிராமங்களில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்டு நடந்து வருகின்றன. மட்டக்களப்பின் வரலாற்று ரீதியான காணி எல்லைகளை மாற்றக் கூடிய புதிய வீதிகள் அமைப்பதும், அரச வளங்களை  முறைகேடாக பயன்படுத்துதல், மதகுருமாரினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றத்தை  மேற்கொள்ளுதல் மற்றும் தமிழர்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருத்தல் போன்ற செயற்பாடுகள் குறிப்பிட்ட காலமாக இந்த மாவட்டத்தில் நடந்து வருகின்றன.

இதனால் இன முரண்பாடுகளை தோற்றுவிப்பதோடு, பிரதேச ரீதியான சிங்களவர்களின் இன பரம்பலை அதிகரிக்கும். தமிழர்களின் வராற்று ரீதியான எல்லைகள் மாற்றியமைக்கப்படும் இந்த சதி வேலைகளில் மாவட்டத்தில் நடக்கின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாக உள்ளன.

2012ஆம் ஆண்டு கால பகுதியில் 76ற்கு மேற்ப்பட்ட சிங்கள குடும்பங்களும் புதிய விகாரைகளும் புதிய வீடுகளும் பிக்குமாராலும்  இராணுவத்தினராலும் அனுமதியற்ற முறையில் நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, முஸ்லிம் - தமிழ் பிரதேச எல்லைகளில் சில காணி தொடர்பான முரண்பாடுகள் இருக்கின்றன. இந்த விடயமும் அரசியல்வாதிகளின் ஆளுகைக்குட்பட்டு   தகராறை  தீர்க்க முனையும் போது இனமுறுகலுக்கு வழிவகுக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் இனப் பரம்பலை குறைத்து சிங்கள இனப் பரம்பலை பிரதேச ரிதீயாக அதிகரிப்பதற்கும் எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்து வரும் கால கட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் நிலை கவலைக்கிடமாக மாறும். ஆளும் தரப்பிலுள்ள அமைச்சர்கள் இது தொடர்பான விடயங்களை சம்மந்தப்பட்டவர்களுடன் பேசினால் பல நெருக்கடிகள் உருவாகுமென அஞ்சுவதாக அறிகின்றோம்.

எனவே  மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகின்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு பலமான சக்திகளாலும் அதிகாரிகளாலும் அரசியல் ஆளும தரப்பினராலும் முடியாத காரியமாகும். எனவே திட்டமிட்ட குடியேற்றங்களை தடுத்து நிறுத்த நீதியை நாடவேண்டும். அதுவும் தோற்கும் பட்சத்தில் தமிழர்களின் நலன்விரும்பும் சக்திகள் தலையிட முன்வர வேண்டும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X