2025 மே 05, திங்கட்கிழமை

'அனர்த்தங்கள் கூடிய மாவட்டங்களில் இரண்டாவதாக மட்டக்களப்பு உள்ளது'

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் கூடிய மாவட்டங்களில் இரண்டாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளதென  மட்டக்களப்பு மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தங்களை குறைப்பதற்கான வேலைத்திட்டமாக கிராம மட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான வதிவிட பயிற்சிச் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தங்களை குறைப்பதற்கான முகாமைத்துவ அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் இப்பயிற்சிச் செயலமர்வு மட்டக்களப்பு மியானி மண்டபத்தில் நடைபெற்றது.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'
இலங்கையில் இரண்டாவது அனர்த்த மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. எந்தநேரத்திலும் இயற்கை அனர்த்தத்தை சந்திப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்கான முன் ஆயத்தங்களும் நம்மிடம் இருக்க வேண்டும். இந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து மட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.

அனர்த்தங்கள் ஏற்பட்டு விட்டால் அரசாங்கமே உதவி செய்ய வேண்டியுள்ளது. அனர்த்தம் ஏற்பட்டுவிட்டவுடன் கிராம உத்தியோகத்தரையும் பிரதேச செயலாளரையுமே மக்கள் தேடுகின்றனர். அனர்த்தங்களை குறைப்பதற்கான முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கு பொதுமக்களின் பங்களிப்பு மிக முக்கியம்.

அனர்த்தங்களை குறைப்பதற்கான முகாமைத்துவ அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் அனர்த்த குறைப்புக்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.

கிராம மட்டத்தில் அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அனர்த்தத்தை குறைப்பதற்கும் முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கும் இது உதவியாக அமையும்' என்றார்.

இதற்கான ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், செங்கலடி பிரதேச செயலாளர் எஸ்.உதயசிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X