2025 மே 05, திங்கட்கிழமை

பெரும்போக நெற்செய்கைக்கான கூட்டங்கள்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான், வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2013ஆம் 2014ஆம் ஆண்டுகளுக்கான பெரும்போக நெற்செய்கை தொடர்பில்  விவசாயிகளுடனான கூட்டங்கள் ஆரம்பமாகியுள்ளதாக அந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் ஆரம்பமான இந்தக் கூட்டங்கள் எதிர்வரும் 12ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 5ஆம் திகதி கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்திலும் 6ஆம் திகதி வவுணதீவு பிரதேச செயலகத்திலும் 10ஆம் திகதி செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலகங்களிலும் 12ஆம் திகதி வாகரை பிரதேச செயலகத்திலும் இந்தக் கூட்டங்கள் நடைபெறும்.

உன்னிச்சை, உறுகாமம், நவகிரி,  வெலிகாகண்டி,  வாகனேரி, கட்டுமுறிவு உட்பட 15 நீர்ப்பாசன மற்றும் சிறிய நீர்பாசனத் திட்டங்களின் ஊடாக பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X