2025 மே 05, திங்கட்கிழமை

பாம்பு தீண்டி சிறுவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் பாம்பு தீண்டி நேற்று திங்கட்கிழமை மாலை உயிரிழந்துள்ளான்.

மாங்காடு எல்லை வீதியைச் சேர்ந்த வீரசிங்கம் டிலக்ஸன் (வயது 16) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இச்சிறுவன்  செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கா.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி பயின்று வருகின்றான்.

இச்சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோதே பாம்பு தீண்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இச்சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளான். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X