2025 மே 05, திங்கட்கிழமை

ஊடகவியலாளர்- பொலிஸாருக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை

Kogilavani   / 2013 செப்டெம்பர் 04 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


கிழக்கு மாகாணத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் நல்லிணக்கத்தைம் புரிந்துணர்வையும் ஏற்படுத்த கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (4) ஊடகவியலாளர்களைச சந்தித்தபோதே இந்நடவடிக்கை தொடர்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் விளக்கமளித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 45 பொலிஸ் நிலையங்களையும் இம்மாகாண ஊடவியலாளர்களுடன் இணைந்து செயற்படத்தக்கவாறு செயற்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதமாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்களுடனான அரைநாள் ஒன்று கூடல் விரைவில் மட்டக்களப்பில் நடாத்தப்படவுள்ளது.

இதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மாகாணத்திலுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

எதிர்காலத்தில் குறித்த பொலிஸ் அதிகாரிகளுடன் ஊடகவியலாளர்கள் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி தமது தேவைகளையும் செய்திகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

கலந்துகொள்ளும் மாகாண ஊடகவியலாளர்களிடையேயிருந்து அனுபவ அடிப்படையில் செயற்குழுவொன்றும் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஹக்மன, திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபர் கபிலஜெயசேகர உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • sivam Wednesday, 04 September 2013 09:18 AM

    இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு மட்டக்களப்பில் உள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு அலைப்பு விடுக்கப் படவில்லை ஏன்? ஐயா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X