2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: இருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 04 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


கொழும்பு -மட்டக்களப்பு பிரதான வீதியில் ஹபரணை பகுதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

வாழைச்சேனை வினாயகபுரம் 8ம் குறுக்கைச் சேர்ந்த இராசையா அபேசுந்தரம் மற்றும் அவரது மனைவி அபேசுந்தரம் பத்தினியம்மா ஆகியோர் துபாயில் இருந்து விடுமுறையில் வந்த தனது மகள், மருமகன் நான்கு பிள்ளைகளை விமானநிலையத்தில் விட்டுவிட்டுவந்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் பயணித்த வான் காலை 06.15 மணியளவில் ஹபரணைப் பகுதியில் மரத்தில் மோதியதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில், இராசையா அபேசுந்தரம் (வயது – 61) ஸ்தலத்தில் உயிர் இழந்துள்ளதுடன் அவரது மனைவி இராசம்மா மற்றும் வான் சாரதியான ஓட்டமாவடியைச் சேர்ந்த அமீனுதீன் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.

சாரதியின் தூக்கம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று ஆரம்பக் கட்ட விசாரனைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X