2025 மே 05, திங்கட்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூநொச்சிமுனைப் பிரதேசத்தில் சட்டவிரோத மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும்  3 பேரை  கைதுசெய்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மாவட்ட விசாரணை அதிகாரி எம்.டி.தஸாநாயக்க தெரிவித்தார்.

பூநொச்சிமுனைப் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடி பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சட்டவிரோதமான முறையில் வயர்களைக் கொழுவி மின்சாரம் பெற்றதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்யபு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக  நபர்களுக்கு தலா 17,650 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X