2025 மே 05, திங்கட்கிழமை

டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 29 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு நகரை அண்டியுள்ள கிராமங்களில் டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கும் வீட்டுக் கிணறுகளில் கப்பி இன மீன்களை இடும் நடவடிக்கையும் நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் நிதியுதவியுடனும்; வவுணதீவு மற்றும் திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் அமுலாக்கத்துடனும்; வீடு வீடாகச் சென்று டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திமிலைதீவு, புதூர், வீச்சுக்கல்முனை, சேத்துக்குடா ஆகிய மட்டக்களப்பு நகரை அண்டியுள்ள  கிராமங்களில்  சுமார் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு இந்த டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நுளம்புக் குடம்பிகளை அழிப்பதற்காக இயற்கை உயிரியல் வழிமுறையாக ஒரு கிணற்றுக்கு 2 கப்பி இன மீன்களும் 2 திலாப்பியா மீன்களும் விடப்படுகின்றன.  அத்துடன் வீட்டையும் அயல் பிரதேசங்களையும் சுத்தமாக வைத்திருப்பது பற்றியும் குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுவதாக திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் எம்.நவரஞ்சன் தெரிவித்தார்.

இதன் ஆரம்ப நிகழ்வில் சுவீடன் கூட்டுறவு நிலைய கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ.மயூரன்,  திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் எம்.நவரஞ்சன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பாலசிங்கம் ரமேஸ்குமார் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X