2025 மே 05, திங்கட்கிழமை

எஸ்.டப்ளியூ.வீ.எப் நிறுவனத்தின் தலைவர் விசாரணைகளின் பின் விடுதலை

Super User   / 2013 செப்டெம்பர் 29 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

எஸ்.டப்ளியூ.வீ.எப் நிறுவனத்தின் தலைவர் நேற்று சனிக்கிழமை இரவு வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குவைத் நாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் உருவாக்கப்பட்டு நாட்டில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நிறுவனமான எஸ்.டப்ளியூ.வீ.எப் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.பௌஸே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோரின் ஜனநாயக, மனித உரிமைகள்,  விழிப்புணர்வு மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக மேற்படி நிறுவனம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து 2008ஆம் ஆண்டு முதல் செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

கைது தொடர்பாக எஸ்.எம்.பௌஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

"1676 உறுப்பினர்களுடன் குவைத் நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் எமது நிறுவனத்தின் செயற்பாடுகளை கிழக்கு மாகாணத்தில் மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டங்களை தற்போது தாம் செய்து வருகின்றோம்.

இந்த நிலையில் தான் காரணங்கள் ஏதும் இன்றி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது தனது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும். மேலும் கடந்த சில வாரங்களில் அடையாளம் தெரியாத சிலர் தன்னை பின்தொடர்வதையும் கண்காணிப்பதையும் பலமுறை அவதானித்துள்ளேன்.

இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு செய்துள்ளேன்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X