2025 மே 05, திங்கட்கிழமை

சமாதான நீதவான்களின் ஒன்றுகூடல்

Super User   / 2013 செப்டெம்பர் 29 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், சிவம் பாக்கியநாதன்

சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட ஒன்றுகூடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றது.

சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் இரா.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சார்ள்ஸ் அவர்களுக்கு தேசிய மட்டத்தில் சிறந்த பெண்மணியாக தெரிவு செய்யபட்டமைக்காக சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினனால் பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்ட்டது.

இந்த ஒன்றுகூடலில் சமாதான நீதவான்களின் பொறுப்பு, அவர்களின் கடமை, சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பங்களிப்பு தொடர்பாகவும் விரிவுரைகள் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X