2025 மே 03, சனிக்கிழமை

வாகன விபத்தில் இருவர் பலி

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித், ஏ.எச்.ஏ. ஹுஸைன்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலனறுவை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மாட்டு எருக்களை ஏற்றிக் கொண்டு வந்த எல்ப் ரக வாகனத்திற்கு மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கும்புறுமூலை சந்தியில் வைத்து வாகனத்தின் முன் டயருக்கு காற்றுப் போயுள்ளது.

இதனால் குறித்த வாகனம் வீதியை விட்டுவிலகி அருகில் உள்ள இராணுவ முகாமிற்குள் புகுந்தமையினால் இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் மீராவோடை ஆலிம் வீதியைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தையான மீராமுகைதீன் அன்வர் சாதாத் (வயது – 33) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதுடன் இவ் விபத்துத் தொடர்பாக மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிறு இரவு எட்டு மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பனிச்சையடி திராய்மடுவைச் சேர்ந்த 26 வயதான தருமலிங்கம் நிரஞ்சன் என்ற இளைஞனே மேற்படி விபத்தில் கொல்லப்படடுள்ளார்.சடலம் இன்று திங்கள் காலை 7 மணி வரை விபத்து இடம்பெற்றதாகக் கூறப்படும் சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்திற்கு முன்னாலுள்ள வீதியிலேயே கிடந்தது.

அவர் பயணித்த சைக்கிளுடன் சடலம் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.முச்சக்கரவண்டி ஒன்றே இந்த இளைஞரை மோதிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மட்டக்களப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X